twitter


நம் இந்தியத் திருநாட்டில்தான் பில்கேட்ஸிடம் போட்டி போடும் உலகப் பணக்காரர்களும் வயிற்றுப்பசிக்காக பிச்சை கேட்கும் இந்திய குடிமகன்களும். வேற்றுமையில் ஒற்றுமை இருக்கவேண்டியதுதான். அதற்காக இப்படியா வேற்றுமை மட்டுமே தலைநிமிர்க்க வேண்டும்?

இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஊழல்களால் 80 சதவீத்தினருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என்று, ஐ.நா.வின் பொருளாதார, சமூக கலாச்சார உரிமை கமிட்டியிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையை பொருளாதார, சமூக, கலாச்சார உரிமை தொடர்பான மக்கள் கருத்துக் குழு தாக்கல் செய்துள்ளது (நன்றி: தினமலர்).

என்னய்யா இப்படி ஒரு குண்ட போடுறாங்க? என்று மல்லாக்கப் படுத்தும் குப்புறப்படுத்தும் யோசித்துப் பார்த்தால் என் தலைதான் சுத்துததே தவிர ஒரு மண்ணும் பிடிபடமாட்டேங்குது. வலைப்பூவில் ஏதாவது சொல்லனுமே என்று கொஞ்சம் சுதாகரித்து எழுந்து இதுபற்றி வலைவிரித்தால்... அடேங்கப்பாதான்!
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350 - 400 மில்லியன் மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35சதவீதம் இந்தியர்கள் 1 அமெரிக்க டாலர் வருமானத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40 சதவீத மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது - என்கிறது ஒரு ஆய்வு (நன்றி: விக்கிப்பீடியா).

நம் நாட்டில் ஊழல் பெருகி வருவதால் ஐந்தில் நான்கு பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லையாம். சரியான நேரத்தில் பொருட்கள் பட்டுவடா செய்யப்படாமல் இருப்பது, பொருட்களை திருடுவது, பெரும் ஊழல்கள் போன்றவற்றால் பொது வினியோக முறை அலங்கோல நிலையில் உள்ளது என்றும் மேற்கண்ட இந்த குழு கூறுகிறது.

பாருங்கய்யா! இந்த அவல நிலையில் தான் நகரமெங்கும் ஐ.டி. நிறுவனங்கள் பெருகி வருகிறது. ஆனால் என்னத்த சொல்ல? ஐ.டி. நிறுவனங்கள் பெருகிவிட்டாலும் அய்யா! அம்மா! பிச்ச போடுங்கய்யா என்கிற கூப்பாடுகள் தொலையவில்லையே?
இந்த லட்சணத்தில் நம்நாட்டின் பொருளாதாரக் கொள்கையெல்லாம் எடுத்து பார்த்தோம் என்றால் ஒண்ணுமே விளங்கமாட்டேங்குது. அந்த லெவலுக்கு குழப்பி வைத்திருக்கிறார் நம்முடைய நிதிஅமைச்சர். விலைவாசி ஏற்றத்துக்கு எந்த சரியான தீர்வை பெறாமல் திணருகிறது மைய்ய அரசு. யாருக்குத் திண்டாட்டம்? வயிற்றுப் பசிக்கு கையேந்தும் சகோதர குடிமகன்களுக்கும் அடுத்த வேளை உணவிற்காக உழைக்கும் அன்றாடகாட்சிகளுக்கும் முக்கியமாக எந்த பிரச்சினைகளுக்கும் பங்கு எடுக்கவேண்டிய நடுத்தரக் குடும்பங்களுக்கும்தான் (அட! ஒட்டுமொத்த இந்தியாவும் அடங்கிவிடும் போல..)

ஆனால் கொஞ்ம் உற்று கவனித்தால் உலகப் பணக்காரர்களாக துடிக்கும் அம்பானிக்களும் டாட்டாக்களும் ஒருபுறமிருக்க, நம்ம மதிப்புற்குரிய சினிமா ஹீரோக்களும், கிரிக்கெட் வீரர்(?)களும் இவ்வளவு கோடிக்களை வைத்து அப்படி என்னதான் செய்றாங்க என்று தெரியவில்லை. (ஹலோ... ஹலோ... அரசியல்வாதிகளையெல்லாம் விட்டுட்டீயமா? என்று நீங்க புலம்புவது என் காதில் கேட்கிறது. இருந்தாலும் என்னத்த சொல்ல அவர்களைப் பத்தி? அப்புறம் பத்தி? வேணாமுங்க இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ் தான்).
என்னங்க நான்பாட்டுக்கு சொல்லிக்கிட்டு போனால்...... அப்புறம் உங்க கருத்தெல்லாம்? அதுதானே முக்கியம்! வாங்க வாங்க உங்க கருத்த பதிவிடுங்க முதலில்... அதுக்கப்புறம் விவாதிப்போம். சரியா?
Saturday, May 17, 2008 | 2 comments | Labels:

2 comments:

  1. Anonymous
    May 17, 2008 at 1:53 AM

    இந்தியா என்றால், எங்களுக்கு தெரிவது, காந்தி, தாஜ் மகால், வறுமை தான்!’ லண்டன் பி.பி.சி., “டிவி’ சர்வேயில், இந்தியா பற்றி வெளிநாட்டு மக்கள், “டக்’கென நினைப்பது என்ன? என்று கேட்டதும், அவர்கள் சொன்னது இது!

    இதுக்கெல்லாம் காரணம் ஒன்றுதான். பணமும், முதலீடுகளும் குறிப்பிட்ட வர்க்த்தில் முடங்கி கிடப்பதுதான்.

  1. இப்னு ஹம்துன்
    May 18, 2008 at 2:06 AM

    பெயரிலும் ஊரிலும் என்னோடு பிணைந்திருக்கும் உங்களை வரவேற்று மகிழ்கிறேன். (செயலிலும் சிந்தனையிலும் இணைந்தியங்கவும் ஆசைதான். ஆனால், நான் கொஞ்சம், கொஞ்சமென்ன, நிறையவே சோம்பேறி என்பதற்கு என் 'எழுத்தோவியங்கள்' சான்று பகர்ந்துகொண்டிருப்பதால், அப்படிச் சொல்ல முடியவில்லை :-))) !

    உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்; ஆக்கங்களால் தமிழ் வலையுலகம் செழிப்படையட்டும்.

    கலக்குங்க நண்பா!