twitter


சில மேனிலைப்பள்ளிகளில் 100-க்கு 88 மாணவர்கள் ஃபெயில். 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றவை ஒரு சில பள்ளிகள் தான். இப்படி கல்வியில் தாழ்ந்து தலைகுனிந்து நிற்கும் கடலூர் மாவட்டத்தில் மாணவர்களில் தரத்தை உயர்த்துவது எப்படி? மாவட்டத்திலுள்ள 42 மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்துக்கூட்டம் போட்டார் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ!
"நமது கவனம் சிதையக்கூடாது. ஆகவே முதலில் நமது செல்ஃபோன்களை ஆஃப் செய்து விடுவோம்". என்ற அறிவிப்போடு பேச்சைத் தொடங்கினார்.இடையில் ஒரு செல்ஃபோன் இடைவிடாமல் அலற, சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார் கலெக்டர்.... அலறியது சேத்தியாதோப்பு பெண்கள் மேன்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சந்திராவின் செல்போன் என்பதைக்கண்டறிந்தார்.
"ஏம்மா ஆஃப் பண்ணலை?" கொஞ்சம் கோபமாகக் கேட்டார். ஆசிரியை கண்கள் கலங்கி விட்டன. "எனக்கு ஆஃப் பண்ணத்தெரியலை சார்!" உண்மையைச் சொன்னார் ஆசிரியை.
"ஒரு தலைமை ஆசிரியை இது கூடத் தெரியாமல் இருக்கலாமா?" தலையில் அடித்துக் கொண்ட கலெக்டர், மற்ற தலைமையாசிரியர்களைப் பார்த்து "நான் பேசியதை எல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டீர்களா?" என்றார். "இல்லீங்க சார்!" எல்லாரும் தலையாட்டினார்கள். "சரி போகட்டும்... நான் என்ன சொன்னேன்னு சொல்லுங்க பார்ப்போம்", கீரப்பாளையம், கருப்பேரி பள்ளித் தலைமையாசிரியர்களைப் பார்த்துக்கேட்டார்.
கடைசி பெஞ்ச் மாணவர்களைப் போல திருதிருவென விழித்தார்கள் அந்த ஆசிரியர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கடலூர் மாவட்டத்தின் கல்வித்தரத்தை எப்படி மேம்படுத்துவது?
நன்றி: நக்கீரன் (05-07-2008)
Wednesday, July 9, 2008 | 1 comments | Labels:

1 comments:

  1. ஜோசப் பால்ராஜ்
    July 9, 2008 at 8:56 AM

    தலைமை ஆசிரியர்களே இந்த நிலமை என்றால்???
    கலெக்டர் கரணமடித்தாலும், கடலூரில் கல்வியை காப்பாற்றமுடியாது.
    ( அட எல்லாம் "க" விலேயே ஆரம்பிக்கிறது, கவிதை கவிதை)